Psalms 14:1-3
1“இறைவன் இல்லை” என்றுமூடன் தன் இருதயத்தில் சொல்கிறான்.
அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை;
நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
2யெகோவா பரலோகத்திலிருந்து
மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார்,
அவர்களில் விவேகமுள்ளவனாவது
இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.
3எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்;
நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை,
ஒருவனாகிலும் இல்லை.
Copyright information for
TamTCV