‏ Psalms 16:8-11

8யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.
அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படமாட்டேன்.

9ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது;
என் உடலும் பாதுகாப்பாய் இளைப்பாறும்.
10ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்;
உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர்.
11வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்;
உமது சமுகத்தில் என்னை ஆனந்தத்தாலும்,
உமது வலதுபக்கத்தில் என்னை நித்திய இன்பங்களினாலும் நிரப்புவீர்.
Copyright information for TamTCV