Psalms 8:2-6
2உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க,உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின்
உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக
வல்லமையை உறுதிப்படுத்தினீர்.
3உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும்
அவற்றில் நீர் பதித்து வைத்த
சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி
நான் சிந்திக்கும்போது,
4மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும்,
மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்? ▼
▼எபிரெய மொழியில் மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷக்குமாரனை நீர் கவனிப்பதற்கும் அவன் எம்மாத்திரம்?
5நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து,
அவர்களை ▼
▼அவர்களை அல்லது அவனை
மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.6உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்;
அனைத்தையும்:
Copyright information for
TamTCV